அரண்மனை வடிவில் விமானம்… சவுதி அரேபியா இளவரசர் விலைக்கு வாங்கினார்
ரியாத்: சவுதி அரேபியா இளவரசர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த விமானம் அரண்மனை போன்று சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியா நாட்டின் கோடிஸ்வரரும் இளவரசருமான அல்வாலீத் பின் தலால் கடந்த 2009-ம் ஆண்டு புதிய விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை 2770 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரண்மனை வடிவில் மாற்றியமைத்து வருகின்றனர்.
பறக்கும் அரண்மனை வடிவிலான இந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய மீட்டிங் ஹால், ரோல்ஸ் ராய்ல் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்ளன. இந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. 2013ம் ஆண்டில் இந்த விமானம் இளவரசரின் பயன்பாட்டுக்கு வருகிறது என்று துபாயில் நடந்த விமானத்துறை மாநாட்டில் இளவரசரின் உதவியாளர் ஹபிப்பெகி தெரிவித்தார்.
நம் ஊரில் விமானத்தில் பயணம் செய்வதே சாதனையாக இருக்கிறது. ஆனால் சவுதி அரேபியாவில் பல ஆயிரம் கோடி ரூபாயில் விமானத்தையே அரண்மனையாக மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications