நெல்லையில் கார் ஏற்றி வக்கீலை கொல்ல முயற்சி: வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
நெல்லை: நெல்லை அருகே நிலமோசடி குறித்து புகார் செய்த வழக்கறிஞர் உட்பட 2 பேரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவத்தை கண்டித்து இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நெல்லையை அடுத்த ராஜபதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கிருஷ்ணன் (38). அவரும் அணைத்தலையூரைச் சேர்ந்த பரமசிவன் என்பவரும் கடந்த 11ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் பைக்கின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி கார் டிரைவர் சீதாராமனை(27) கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கங்கைகொண்டான் அருகே பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 7 பேர் மோசடி செய்தது குறித்து கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்தவர்கள் அவரை கார் ஏற்றி கொல்ல முயன்றது தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆயிரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கிருஷ்ணனை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் இன்று நெல்லையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்தனர் .இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications