ஸ்ரீதேவி, சரஸ்வதி, ஷர்மிளா... ரயில் வண்டி போல காதல் லீலை புரிந்த ரயில்வே அதிகாரி கைது!
சென்னை: சென்னையைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக மூன்று பெண்களை மணந்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது அம்பலமாகி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.அங்குள்ள எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வசித்து வருபவர் சிவமணி. 44 வயதான இவர் ரயில்வேயில் அதிகாரியாக இருக்கிறாராம்.
சிவமணிக்கு பெண் பழக்கம் அதிகம் இருந்துள்ளது. காம இச்சை கொண்டு அலைந்த அவர் அடுத்தடுத்து 3 பெண்களை மணந்து, குழந்தைகளையும் கொடுத்து குடும்பமும் நடத்தி கைதாகியுள்ளார்.

முதலில் நர்ஸ்
சிவமணி முறைப்படி முதலில் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ஸ்ரீதேவி. இவருக்கு வயது 35. நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

2 வருடங்களுக்கு முன்பு எஸ்கேப்
ஸ்ரீதேவியுடன் குடும்பம் நடத்தி வந்த சிவமணி திடீரென 2 வருடங்களுக்கு முன்பு மாயமாகி விட்டார். இதனால் திடுக்கிட்டுத் தவித்துப் போன ஸ்ரீதேவி அவரைத் தேடாத இடம் இல்லை, போகாத இடமி்ல்லை. ஆனாலும் காணவில்லை சிவமணி.

வலைவீசி தேடிய மகளி்ர் போலீஸ்
இதையடுத்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஸ்ரீதேவி. அவர்களும் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையி்ல்தான் சிவமணியின் காதல் லீலைகள் குறித்துப் போலீஸாருக்குத் தெரிய வந்தது. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் அம்பலமானது.

2வது மனைவி சரஸ்வதி - கூடவே 2 குழந்தைகளும்
ஸ்ரீதேவியுடன் குடும்பம் நடத்திய நிலையிலேயே சரஸ்வதி என்ற 30 வயதுப் பெண்ணுடனும் குடும்பம் நடத்தி வந்துள்ளார் சிவமணி. இதன் மூலம் 2 குழந்தைகளும் பிறந்துள்ளன. சரஸ்வதியை விசாரித்தபோது சிவமணி தனது கணவர் என்று கூறியுள்ளார். ரேஷன் கார்டையும் தூக்கிக் காட்டியுள்ளார்.

தப்பி ஓடிய சிவமணி
சரஸ்வதி வீட்டுக்கு சிவமணி வந்தால் கோழியை அமுக்குவது போல பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். ஆனால் சிவமணி வராமலேயே எஸ் ஆகி விட்டார். இருப்பினும் போலீஸார் விடாமல் தீவிரமாக வலை வீசியதில் சின்மயா நகரில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது.

துணை நடிகை ஷர்மிளா
சின்மயா நகர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் அது துணை நடிகை ஷர்மிளாவின் வீடு என்று தெரிந்தது. அவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருபவர். அவருக்கு 18 வயதில் மகள் இருக்கிறார் - ஆனால் அப்பா சிவமணி அல்ல. ஷர்மிளாவை கல்யாணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார் சிவமணி.

திருச்சியிலிருந்து வந்தபோது சிக்கினார்
ஷர்மிளா ராஜபாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களில் தலை காட்டியுள்ளார். தற்போது கூட படப்பிடிப்புக்காக திருச்சி போயிருந்தார். கூடவே சிவமணியும் போயிருந்தார். இருவரும் ஜோடியாக திருச்சியிலிருந்து திரும்பியபோது போலீஸார் காத்திருந்து மடக்கிப் பிடித்தனர்.

கோர்ட்டில் வைத்து குமட்டில் குத்திய மனைவிமார்கள்
ஸ்ரீதேவி புகாரின் பேரில் சிவமணியை போலீஸார் கைது புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரை கோர்ட்டுக்குக் கூட்டி வந்தபோது அங்கு நின்றிருந்த ஸ்ரீதேவியும், சரஸ்வதியும், சிவமணியை சரமாரியாக திட்டி சாபமிட்டனர். ஆனாலும் சளைக்காத சிவமணி, இவர்கள் இருவருடனும் சேர்ந்து வாழத் தயார் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்.












Click it and Unblock the Notifications