டெல்லி பலாத்கார சம்பவம் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சனை அல்ல: கட்ஜூ கருத்து

இது தொடர்பாக தமது வலைப்பக்கத்தில் கட்ஜூ எழுதியிருப்பதாவது:
டெல்லியில் நடைபெற்ற பலாத்கார சம்பவம் மிகவும் கொடூரமான குற்றம். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கவேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதியில் குறிப்பாக கிராமப் புறங்களில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் இப்படியான குரல்கள் எழுந்திருக்குமா? ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் அது பேசப்பட்டிருக்குமா? என்பதையும் அறிய விரும்புகிறேன்..நிச்சயமாக அப்படி ஒரு குரல் எழாது. டெல்லி மட்டுமே அல்ல முழு இந்தியா அல்ல...
விதர்பா மற்றும் ஆந்திராவில் கடந்த 10- 15 ஆண்டுகளில் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். விவசாயிகள் தற்கொலையில் உலக சாதனை இது. ஆனால் இதற்கெல்லாம் இத்தகைய கூப்பாடுகளும் குரல்களும் எழவில்லையே...
பலாத்காரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் டெல்லி விவகாரத்தில் குரல் எழுப்புகிற அனைவரையும் கேட்டுக் கொள்வது என்னவெனில் இது ஒன்றுதான் ஒட்டுமொத்த இந்தியாவின் முக்கிய பிரச்சனை என்று நினைக்காமல் அனைத்து பிரச்சனைகளிலும் ஒரே மாதிரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதுதான்.
ஐபிசி 376-ன் கீழ் பலாத்கார குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்க வழி இருக்கிறது. அப்படி இருக்கும்போது டெல்லி பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையோருக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்க கோருகின்றனர் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
நாடு முழுவது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்ட விலைவாசி, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, குழந்தைகளுக்கான சத்து குறைபாடு, கல்வி பிரச்சனைகள் போன்றவற்றுக்கும் டெல்லி பலாத்கார சம்பவத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கட்ஜூ.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications