புதுவையில் புத்தகக் கண்காட்சி -தொடங்கி வைத்தார் ரங்கசாமி

புதுச்சேரி வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கியதுடன், பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களையும் முதல்வர் வெளியிட்டு வாழ்த்தினார்.
புதுவை அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் பி. இராசவேலு, கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராசன் ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். புதுசேரிப் புத்தகச் சங்கத்திற்குச் சிறப்பான தொண்டு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. கோ.முருகன் அனைவருக்கும் நினைவுப்பரிசில் வழங்கினார்.
புத்தகச் சங்கத்தின் தலைவர் எம்.கே. சாயிகுமாரி அனைவரையும் வரவேற்றார். முனைவர் பாஞ். இராமலிங்கம் புத்தகச் சங்கத்தின் பணிகளை எடுத்துரைத்தார். புலவர் சீனு.இராமச்சந்திரன், புலவர் நாகி, புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் அரங்க. முருகையன் ஆகியோர் உரையாற்றினர்.
புத்தகக் கண்காட்சி 19-12.2012 முதல் 30.12.2012 வரை நடைபெற உள்ளது. காலையில் 11.30 முதல் இரவு 8.45 மணிவரை கண்காட்சி திறந்திருக்கும். இக்கண்காட்சியில் 104 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
செய்தி: முனைவர் மு.இளங்கோவன்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications