மோடி பிரதமர் வேட்பாளரா?... பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பாஜக!

பிரதமர் பதவிக்கு மோடி குறி வைத்து காய் நகர்த்த ஆரம்பித்து ரொம்ப நாட்களாகி விட்டது. அவருக்கு ஆதரவாக பாஜகவுக்குள் சில தலைவர்கள் ஏற்கனவே ஜால்ரா தட்டி பேசி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் அத்வானியே கூட மோடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தான் என்று கூறும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
தற்போது குஜராத் தேர்தலில் கடந்த முறையை விட 2 இடங்கள் குறைந்து போய் வெற்றி பெற்றிருந்தாலும் கூட பெரிய வெற்றியாகவே மோடியின் வெற்றி பார்க்கப்படுகிறது. எனவே அவரது பிரதமர் கனவு மேலும் பிரகாசமாகியுள்ளாதகவும் கூறப்படுகிறது.
எனவே மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவீர்களா என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்டபோது, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என ஊகத்தின் அடிப்படையில் கூற முடியாது. இப்போது அவரது வெற்றியைக் கொண்டாட வழி விடுங்கள். பாஜகவில் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர். இளைஞரால் வழிநடத்தப்படும் குடும்ப ஆட்சி போன்றது அல்ல பாஜக. உரிய நேரத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
மோடிக்காக குஜராத்திலேயே முகாமிட்டு தீவிரமாக பணியாற்றியவரான ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும், அத்வானி எதிர்ப்பாளருமான அருண் ஜேட்லி கூறுகையில், ஊடகங்களின் பார்வையில் இது உற்சாகமளிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் பிரதமர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
அதேசமயம், ராம் ஜேட்மலானி வழக்கம் போல பளிச்சென பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், குஜராத் தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றிருப்பதன் மூலம், பிரதமர் வேட்பாளருக்கு மோடி தகுதியானவர் என்பது நிரூபணமாகி உள்ளது என்றார். இவர் தற்போது கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications