பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்றும் ஆஜர்: இன்னும் 300 கேள்விகள் பாக்கி!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 19ம் தேதி முதல் தொடர்ந்து ஆஜராகி வரும் சசிகலா வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
நீதிபதி பாலகிருஷ்ணா கடந்த புதன் கிழமை கேட்ட 110 கேள்விகளுக்கும் நேற்று 83 கேள்விகளுக்கும் பதலளித்திருக்கிறார். இதுவரை இந்த சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா 825 கேள்விகளுக்கு பதலளித்திருக்கிறார்.
இதுவரை கேட்ட கேள்விகளை பொறுத்தவரை சசிகலா பங்குதாரராக பதவி வகித்த சசி எண்டர் பிரைசஸ் ஜெயா
பப்ளிகேஷன்ஸ் நமது எம்.ஜி.ஆர்., பேக்ஸ் யுனிவர்சல் மற்றும் வினோத் வீயோ விஷன் உள்ளிட்ட வங்கி ஆவணங்களின் அடிப்படடையில் பண பரிவர்த்தனை தொடர்பாக பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலா பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும், நல்லம்ம நாயுடுவின் அறிக்கையை சார்ந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால் நாளையும் சசிகலா கோர்ட்டில் ஆஜராவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 2004ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து நடந்து வருகிறது. முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனையா கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது இந்த வழக்கினை நீதிபதி பாலகிருஷ்ணா விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications