ரூ.4 கோடி சொத்துக்காக கணவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்ல முயற்சி: கமிஷனரிடம் பெண் புகார்
சென்னை: ரூ.4 கோடி சொத்துக்காக தனது கணவருக்கு அவரது உறவினர்கள் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்ல முயற்சி செய்வதாக பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ஜாபர்கான் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி வளர்மதி (33). அவர் தனது மகள் சர்மிளாவுடன்(14) சென்னை போலீஸ் கமி்ஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. கடந்த ஜூலை மாதம் எனது கணவர் ஆறுமுகம் உடல்நிலை பாதிக்கப்பட்டார். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு ரூ. 4 லட்சம் வரை செலவானது. பின்னர் கணவரின் உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த மாதம் 10ம் தேதி ஒரு மருந்து பாட்டிலை என்னிடம் கொடுத்து சாப்பாட்டில் கலந்து கணவருக்கு கொடுக்க சொன்னார்கள். இது என்ன மருந்து என்று கேட்டபோது இதனை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறிய அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
என் கணவர் படுக்கையில் இருப்பதை பயன்படுத்தி எனது கணவரின் அண்ணன் கோதண்டம், கணவர் பெயரில் இருந்த வீட்டை மாற்றி எழுதிக் கொண்டார்.
இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் செய்தும் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். ரூ.4 கோடி மதிப்பிலான சொத்துக்காக எனது கணவருக்கு ஸ்லோ பாய்சன் (மெதுவாக ஆளை கொல்லும் விஷம்) கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். நான் எனது மகளுடன் கஷ்டப்பட்டு வருகிறேன். அவரது சொத்துக்களை எனது கணவரிடம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications