பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை! - முதல்வருக்கு அமீர் கோரிக்கை

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:
தலைநகர் டெல்லியில் கடந்த 16-ம் தேதி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் உலுக்கு உறைய வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த கொடிய செயலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளுக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதனை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்ப வேண்டும். இது இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு ஒரு அபாய எச்சரிக்கையாக அமையும்.
இதுபோன்ற கேவலமான குற்றச் செயல்களில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது தலைநகர் டெல்லி என்பது 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப் பெரிய தலைகுனிவு மட்டுமல்ல, அவமானமும் கூட என்பது நிதர்சன உண்மை.
இந்த கொடிய நிகழ்ச்சி நம் நெஞ்சை விட்டு மறைவதற்குள், நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தில் 7-ம் வகுப்பு படித்த மாணவி புனிதா மிகக் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இக்கொடிய செயலைச் செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவி சம்பவத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் டெல்லி அரசுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டி இந்தியாவுக்கே உதாரணமாகத் திகழவேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications