பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சுப்பையாவின் பகீர் பயோடேட்டா

மணியாச்சி அருகே பாறைகுட்டத்தைச் சேர்ந்தவன் சுப்பையா. இவனுக்கு திருமணமாகிவிட்டது. இவன் சொந்த சித்தியிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறான். சித்தி என்றும் பார்க்காமல் தொடர்ந்து சில்மிஷம் செய்து கொண்டிருந்தான் சுப்பையா.
இதனைத் தொடர்ந்து சுப்பையா மீது போலீசில் புகார் கொடுக்க வேண்டிய நிலை அவனது சித்திக்கு வந்தது. இதில் ஆத்திரமடைந்த சுப்பையா, சித்தியைத் தாக்கியிருக்கிறான். இவன் மீது வேறு சில வழக்குகளும் நிலுவையில் இருந்த நிலையில் போலீசிடம் சிக்கினான். இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் அவன் அடைக்கப்பட்டான்.
பாளையங்கோட்டை சிறையிலிருந்து கடந்த வாரம்தான் விடுதலையாகி வந்தான் சுப்பையா. தாதன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்திருக்கிறான். அப்போதுதான் பள்ளி மாணவி புனிதாவை பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறான்.
இது தொடர்பாக போலீசில் வாக்குமூலம் கொடுத்த சுப்பையா, மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி மாணவியின் துப்பாட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளான்.


Click it and Unblock the Notifications
