என் மகளை சீரழித்தவர்களை தூக்கில் போடுங்கள்: மாணவியின் தந்தை கண்ணீர்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது. டெல்லியில் கடந்த 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருவதால் தலைநகரம் ஸ்தம்பித்துள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, மகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் போராடுவது தமக்கு ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார். அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அமைதிகாக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் மகளின் வாழ்க்கையை சீரழித்த கயவர்களுக்கு மரணதண்டனையைத் தவிர வேறு எந்த தண்டனை வழங்கினாலும் தமக்கு திருப்தியளிக்காது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் உயிரைக் காப்பாற்ற டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இதுவரை அந்த மாணவிக்கு 6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் அவர் உடல் நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே உள்ளது.
சிறுகுடல் அகற்றப்பட்டுவிட்டதால் திரவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. ரத்த அணுக்கள் படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாணவி சீராக மூச்சு விட்டதால் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. ஆனால் நேற்று அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. இதையடுத்து மாணவிக்கு மீண்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் வயிற்று பகுதியில், பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அடுத்தடுத்து கிருமி தொற்று ஏற்பட்டப்படி உள்ளது. அந்த கிருமி தொற்றை கட்டுப்படுத்த டாக்டர்கள் மிக கடுமையாக போராடியபடி உள்ளனர்.
பழைய, துருபிடித்த கம்பியால் தாக்கியதாலேயே பல்வேறு வகை கிருமி தொற்று ஏற்பட்டுவிட்டது. இதை உறுதிபடுத்தியுள்ள டாக்டர்கள் அதற்கு ஏற்ப மாணவிக்கு சிகிச்சையை மாற்றியுள்ளனர்.
தற்போது மாணவி நல்ல உணர்வுடன் உள்ளார். அறுவை சிகிச்சை செய்துள்ள பகுதிகளில் அதிகம் வலிப்பதாக கூறி வருகிறார்.
என்றாலும் அவர் மனம் தளரவில்லை. 6 அறுவை சிகிச்சைக்கு பிறகும் மாணவி மனதைரியத்துடன் இருப்பதாக, அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் அதனி தெரிவித்தார். எனினும் இன்னும் 10 நாட்களை மாணவி கடக்க வேண்டும். அதுவரை எதுவும் சொல்ல இயலாது என்று கூறி உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications