சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்தியர்கள் உள்பட 22 பேர் மீட்பு
மொகதிஷு: கடந்த 2009ம் ஆண்டு ஏமன் கடல் பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் உள்பட 22 பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் துபாய் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான எம்.வி. ஐஸ்பர்க் 1 என்ற கப்பல் பனாமா நாட்டு கொடியுடன் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் ஏடன் வளைகுடாவில் சென்றபோது சோமாலிய கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலை தாக்கி அதில் இருந்த 22 ஊழியர்களை பிணையக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
பிடித்துச் செல்லப்பட்ட ஊழியர்கள் கானா, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து கானா, இந்தியா, பாகிஸ்தான், பிலி்ப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாட்டு கடற்படையினர் சோமாலியாவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சோமாலியாவின் பண்ட்லேண்ட் என்ற பகுதியில் கடற்கொள்ளையர்களுக்கும், கடற்படையினருக்கும் இடையே கடந்த 2 வாரங்களாக தீவிர சண்டை நடந்தது. இறுதியில் கப்பல் கடற்படையினரின் வசம் வந்தது. அதில் இருந்த 22 பேரும் 2 ஆண்டுகள் 9 மாதங்கள் கழித்து மீட்கப்பட்டனர்.
அந்த 22 பேரையும் கடற்கொள்ளையர்கள் துன்புறுத்தியற்கான அடையாளங்கள் அவர்களின் உடலில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications