குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?... திகில் தந்த ஜூன்!
ஜூன் மாதத்தையும் சும்மா சொல்லக் கூடாது. பரபரப்பு, திடுதிப்பு மற்றும் டென்ஷனாகவே முடிவடைந்தது.
சென்னையில் நடந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக் கூட்டத்தின்போது நடிகை குஷ்புவின் இடுப்பை யாரோ கிள்ளியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதவிர உலக சாம்பியனாக விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் வென்றது, அங்கம்மாள் காலனி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டது, மதுரை ஆதீன மடத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம் ஆடியதாக வழக்குத் தொடரப்பட்டது, சென்னை அண்ணா சாலையி்ல் அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்த பரபரப்பு என ஜூன் மாதமும் திகிலாகவே முடிந்தது.

உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்
மாஸ்கோவில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த். அதன் பின்னர் இன்று தாயகம் திரும்பிய ஆனந்துக்கு ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் ஆடல் பாடலுடன் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?
திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாளையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை யாரோ மர்ம நபர் கிள்ளியதாக பரபரப்பு ஏற்பட்டது.

அங்கம்மாள் காலனி ..முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது
சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள குடிசைக்கு தீ வைத்தது, அங்குள்ள 10க்கும் மேற்பட்ட குடிசைகளை சூறையாடியது தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று பிற்பகல் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

முத்துலட்சுமி மீது பாய்ந்த வீரப்பன் மகள்கள்
எங்களுக்கோ அல்லது எங்கள் கணவர்மார்களின் குடும்பத்தாருக்கோ ஏதாவது ஆனால் அதற்கு எங்கள் தாய் முத்துலட்சுமி தான் காரணம் என்று சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்கள் வித்யாராணியும், விஜயலட்சுமியும் புகார் கூறினர்.

அதிமுகவில் இணைந்த தேமுதிக மகளிர் அணி செயலாளர் ரெஜினா பாப்பா!
தேமுதிக மகளிர் அணி செயலாளர் ரெஜினா பாப்பா மற்றும் புதுக்கோட்டை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜா பரமசிவம் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம்
மதுரை ஆதீன மடத்தில் நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் அறுவறுக்கத்தக்க வகையில் ஆபாசன நடனம் ஆடியதாக கூறி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் - வென்றார் கார்த்திக் தொண்டைமான்
புதுக்கோட்டை சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் விறுவிறுவான அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுகவின் கார்த்திக் தொண்டைமான் வெற்றி பெற்றார்.

'பெயிலில் ரிலீஸான' நித்தியானந்தா மதுரை வந்தார்
பாலியல் குற்றச்சாட்டு, அடிதடி, பொது அமைதிக்குப் பங்கம் ஆகிய வழக்குகளில் சிக்கி கர்நாடகத்தில் கைதாகி சிறை சென்று, ஜாமீனில் விடுதலையாகியுள்ள நித்தியானந்தா மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

வீரபாண்டி ஆறுமுகம் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
திமுகவின் முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமஜெயம் கொலை வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்
எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சாலை விபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் மரணம்
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி சென்னையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அண்ணா சாலையி்ல் பயங்கரம்: மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்தது
சென்னை, அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பஸ் இன்று பிற்பகல் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்தது. இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications