For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஹலோ கலெக்டரா... சரக்கு வேணும்... கடை எப்ப திறப்பீங்க?'

Google Oneindia Tamil News

ஜூலையில் வன்முறை என்று பார்த்தால் சற்று குறைவுதான். அதேசமயம், அரசியல் ரீதியாக சில ஷாக் சம்பவங்கள் நடந்தேறின.

அசைக்க முடியாத அமைச்சராக வலம் வந்த கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியாக பதவியிலிருந்து தூக்கப்பட்டார். புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார்.

அதேபோல இன்னொரு பரபரப்பு செய்தியாக அடிபட்டது, நித்தியானந்தா -நடிகை ரஞ்சிதாவை எப்படி கையும் களவுமாக பிடித்தேன் என்பது குறித்து முன்னாள் பெண் சீடரான ஆர்த்தி ராவ் கர்நாடக போலீஸில் கொடுத்த வாக்குமூலம்தான்.

நித்தி-ரஞ்சிதாவை கையும் களவுமாக பிடித்தது எப்படி..விவரித்த ஆர்த்தி ராவ்

நித்தி-ரஞ்சிதாவை கையும் களவுமாக பிடித்தது எப்படி..விவரித்த ஆர்த்தி ராவ்

நித்தியானந்தாவின் அறையில் அவரது அனுமதியுடன் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட, ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஏர் பியூரிபயரை பொருத்தி, அதன் மூலம் நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட அந்தரங்க காட்சிகளை பதிவு செய்தேன் என்று அவரது முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் தெரிவித்தார்.

சிறை நிரப்ப திரண்ட லட்சம் திமுக தொணடர்கள்

சிறை நிரப்ப திரண்ட லட்சம் திமுக தொணடர்கள்

திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வரை கைதானார்கள்.

'ஹலோ கலெக்டரா... சரக்கு வேணும்... கடை எப்ப திறப்பீங்க?'

'ஹலோ கலெக்டரா... சரக்கு வேணும்... கடை எப்ப திறப்பீங்க?'

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கே.கே நகரைச் சேர்ந்த நெல்சன் மாணிக்கம் என்ற வங்கி ஊழியர், மாவட்ட கலெக்டருக்குப் போனைப் போட்டு, 10.30 மணிக்கு டாஸ்மாக் கடை பூட்டி இருக்கிறது. நாங்க எப்படி சரக்கு வாங்குவது? 24 மணி நேரம் பார்னு சொன்னீங்க... பாரெல்லாம் மூடிக் கிடக்கு. இப்ப எப்படி சரக்கடிப்பது? என்று பேசி டார்ச்சர் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா'வைக் கிழித்த காங்கிரஸார்!

'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா'வைக் கிழித்த காங்கிரஸார்!

பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகினர்.

செங்கோட்டையனிடமிருந்து அமைச்சர், கட்சிப் பதவி பறிப்பு

செங்கோட்டையனிடமிருந்து அமைச்சர், கட்சிப் பதவி பறிப்பு

தமிழக வருவாயத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் நியமனம்

புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் நியமனம்

தமிழக அமைச்சரவையில் புதியவராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார். வருவாய்த்துறை அமைச்சராக அவர் அறிவிக்கப்பட்டார்.

டுபாக்கூர் அப்ரோ ஏசுதாஸ் தலைமறைவு

டுபாக்கூர் அப்ரோ ஏசுதாஸ் தலைமறைவு

ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி செய்து பெரும் பணத்தை மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு மூல காரணமான அப்ரோ ஏசுதாஸ் தலைமறைவானார்.

English summary
2012 is getting ready to say goodbye. Here is a roundup of the year, which registered memorable moments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X