பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை தேவை: ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

குஜராத்தில் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றபின்னர் சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதா,விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். டெல்லியில் நடைபெற்ற மாணவி பலாத்கார சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க சட்டத்தினை கடுமையாக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். பாலியல் குற்ற வழக்குகளில் கால விரையத்தைத் தவிர்த்து விரைவாக நடத்தி முடிவுக்கவும் வகை செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications