For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

12 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 8 ஆண்டு சிறை

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: 12 வயது மகளை தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 70 வயது நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த மான்சிங் தாப்பா என்பவர் மீது கடந்த 2011ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட மகளும் அவளது 10 வயது தங்கையும் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சிறுமிகளின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சஞ்சய் கார்க் உத்தரவிட்டார்.

அந்த சிறுமியின் தாயார், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். ஆனால், குடிபோதையில் தேவைப்படும் போதெல்லாம் பெற்ற தந்தையே தன்னை பலவந்தமாக கற்பழித்ததாகவும் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்தார்.

ஆனால், தனக்கு 70 வயது ஆகிவிட்டதால் நான் ஆண்மையிழந்துவிட்டேன், இதனால் என்னால் கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபட முடியாது என்று மான்சிங் வாதிட்டார். மேலும் எனது மகள் தனது காதலனை திருமணம் செய்து கொள்வதை நான் ஏற்றுக் கொள்ள மறுத்தேன்.

இதனால், என் மீதுள்ள ஆத்திரத்தில் என்னை பழி வாங்க எனது மகள் போலீசில் பொய் புகார் அளித்தார் என்றார்.

ஆனால், தாப்பாவின் இந்த பொய்யான வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

English summary
A 70-year-old man, who had claimed that he could not have committed the offence as he has turned impotent due to his age, has been sentenced to eight years' imprisonment by a city court for repeatedly raping his minor daughter. Dismissing his claim, additional sessions judge Sanjay Garg held Delhi resident Man Singh Thapa guilty of raping his daughter. The court noted, "It is very difficult to visualise that the girl and her sister, who are just 12 and 10 years old, could make such allegation against their biological father who was maintaining and taking care of them and was the only person on which they were dependent for their day to day care especially when their mother is no more."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X