13 வயது சிறுமியை சீரழித்த பக்கத்து வீட்டுக்காரர்.... அடங்க மறுக்கும் காமக் கொடூரர்கள்!
ஹசன்: டெல்லி பாலியல் பலாத்கார செயல் ஏற்படுத்திய வடுவே இன்னும் அழியாமல் இருக்கும் நிலையில் நாடு முழுவதும் பலாத்காரக் குற்றச் செயல்களுக்கு சற்றும் குறைவில்லை. கர்நாடக மாநிலத்தில் 13 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.
கர்நாடகத்தின் ஹசன் மாவட்டம் கட்டயா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜு என்ற நபரின் வீட்டுக்குப் பக்கத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று அந்த சிறுமியின் தாயார், தனது மகளை பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட்டு விடுமாறு ரங்கராஜுவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து ரங்கராஜு சிறுமியை பைக்கில் ஏற்றிச் சென்றார். போகும்வழியில், சிறுமியை ஒரு தனியான இடத்தில் வைத்து பலாத்காரம் செய்து விட்டார். டிசம்பர் 18ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து நேற்று இரவுதான் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரங்கராஜு தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications