பெண்கள் பற்றிய கருத்தை மதுரை ஆதீனம் திரும்பப் பெற மாதர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி: பெண்கள் பற்றிய கருத்தை மதுரை ஆதீனம் உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மாதர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துள்ளார். இச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இன்றைக்கு இருக்கும் தண்டனை சட்டம் பெண்களுக்கு பாதுகாப் பானதாக இல்லை. எனவே, மத்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றவாளிக்கு அதிகபட்சமாக தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வரவேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் பெண்கள் ஆடை அணிவது குறித்து கூறிய கருத்தை உடனடி யாக திரும்ப பெறவேண்டும். பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். தங்களுக்கான ஜனநாயக பூர்வமான முடிவுகளை எடுக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது. ஒரு சில சாதிய அமைப்புகளின் தலைவர்கள் என்று தங்களை கூறிகொள்ளும் ராமதாஸ் போன்றவர்கள் பெண்கள் குறித்து பேசும் கருத்து சரியில்லை.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காரைக்காலை சேர்ந்த இளம் பெண் வினோதினிக்கு புதுச்சேரி அரசு உடனே மருத்துவ சிகிச்சைக்கான முழு நிவாரணத்தை வழங்க வேண்டும். இதில் சம்பந்தபட்டுள்ள குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டணை வழங்க காவல்துறை செயல்பட வேண்டும் என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications