திரினமூல் காங். விழாவில் அழகிகள் குத்தாட்டம்.. பணம் வீசி மகிழ்ந்த 'தலைவர்கள்'!
கொல்கத்தா: மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி நடந்த விழாவின்போது நடன அழகிகளைக் கூட்டிவந்து டான்ஸ் ஆட வைத்து, அவர்கள் மீது பணத்தாளை வீசி எறிந்து உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர் அக்கட்சியினர். இது மேற்கு வங்க மக்களிடையே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அருகே திரினமூல் காங்கிரஸின் மாவட்ட நிர்வாகி்கள் சிலர், கட்சியின் தொடக்க விழாவையொட்டி ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கொல்கத்தா அருகே பாங்கூர் என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். கூடவே நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அரைகுறை மற்றும் அப்பட்டமாக உடல் உறுப்புகள் தெரியும்படியான உடையில் பெண்கள் கலந்து கொண்டு ஆடிப் பாடினர்.
அவர்களுடன் சேர்ந்து தலைவர்களும், நிர்வாகிகளும் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பலர் கரன்சி நோட்டுக்களை அப்பெண்கள் மீது வீசி எறிந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாடே டெல்லி பாலியல் பலாத்காரச் செயலால் பெரும் சோகத்திலும், வருத்தத்திலும், விரக்தியிலும், வேதனையிலும் இருக்கும் நிலையில் திரினமூல் காங்கிரஸார், இப்படி பெண்களை ஆட விட்டு, அவர்கள் மீது கரன்சி நோட்டுக்களை வீசி மகிழ்ந்த செயல் மேற்கு வங்க மக்களிடையே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரினமூல் காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications