புத்தாண்டு பார்ட்டியில் பயங்கரம்: 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 2 பேர்

டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மருத்துவ படிப்பு மாணவியின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தெற்கு டெல்லியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு போதைப் பொருள் கொடுத்து இரண்டு பேர் கற்பழித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவி இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர். அந்த இருவரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் பணி புரிந்துள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் சரோஜினி நகரில் வசித்து வருகின்றனர். ஒருவர் ஐடி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணிபுரிந்துள்ளார். மேலும் மற்றொருவர் ஹெச்.ஆர். துறையில் பணிபுரிந்துள்ளார்.
இந்த இருவரில் ஒருவர் சமூகவலைத்தளம் மூலம் அந்த மாணவியுடன் நட்பு பாராட்டியதுடன் அவரை சந்திக்க வேண்டும் என்று பலமுறை தெரிவித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications