மதக் கலவரத்தை தூண்டும் பேச்சு: எம்.எல்.ஏ. ஒவைசி மீது வழக்குப் பதிவு

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார்.
இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் காஷிம்ஷெட்டி கருணாசாகர் என்பவர் கடந்த மாதம் 28ம் தேதி தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ஹைதராபாத்தில் உள்ள சந்திராயன்குட்டா தொகுதி எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி இந்து மதத்தை அவமதித்தும், இந்து, முஸ்லிம்களுக்கு இடையே மதக் கலவரத்தை தூண்டிவிடும் வகையிலும் பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இன்று அம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒவைசி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்திலேயே ஒவைசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், சிகிச்சைக்காக என்று கூறிக் கொண்டு அக்பருத்தீன் லண்டனுக்கு ஓடிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அக்பருத்தீன் ஒவைசி ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசாதுத்தீன் ஒவைசியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications