திருச்சி வந்த ராமதாஸுக்கு தலித்கள் கருப்புக் கொடி
திருச்சி: அனைத்து சமூகப் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஜாதி அமைப்புகளை சேர்த்துக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு வரும் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து சமூக பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார் ராமதாஸ். இதில் இடம் பெற்றிருப்பது அனைத்துமே சாதி அமைப்புகள்தான். இவர்களைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு தலித்களுக்கு எதிராகப் பேசி வருகின்றனர் ராமதாஸும், மற்றவர்களும்.
ஒவ்வொரு கூட்டத்திலும் தலித் மக்களுக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வருகிறார்கள் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ராமதாஸ் சாதிக் கலவரத்தைத் தூண்டப் பார்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில், சமூகப் பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் இன்று திருச்சியில் நடக்கிறது. இதில் ராமதாஸ் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி வந்தார். அப்போது கோர்ட் முன்பு கூடிய, விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், புதிய தமிழகம் ஆகிய கட்சியினர் ராமதாஸைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
புதுவை பாலியல் பலாத்காரத்திற்கு ராமதாஸ் கண்டனம்
இதற்கிடையே, புதுச்சேரியில் பிளஸ் டூ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயலுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து தமிழகம் இன்னும் மீளாத நிலையில், புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் சமூக விரோதிகளால் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
புதுவை மாநிலம் திருபுவனை அருகில் உள்ள கொந்தபுரிநத்தத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கடந்த ஆங்கிலப் புத்தாண்டு அன்று தனிப்பயிற்சி வகுப்புக்காக சென்ற போது, அவரை சிலர் மயக்க மருந்து கொடுத்து விழுப்புரத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. படித்துக் கொண்டிருக்கும் மாணவி மீது மிகக்கொடூரமான முறையில் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த பாலியல் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்குவதுடன் மனநல ஆலோசனையும் வழங்கி, அவரது ஆழ்மனதில் உள்ள பாதிப்புகளைப் போக்க வேண்டும். மாணவியின் விருப்பப்படியே அவர் மருத்துவப் படிப்பு படிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் புதுவை அரசே வழங்க வேண்டும். மேலும் புதுவையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நகரம் முழுவதும் பெண்காவலர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்துவதுடன், முடங்கிக் கிடக்கும் புதுவை மாநில மகளிர் ஆணையத்தை முழு அளவில் செயல்படச்செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
சாலை மறியல்
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 150 பேர் ராமதாஸ் தங்கிய சங்கம் ஹோட்டலுக்கு ஊர்வலமாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை கண்டோன்மென்ட் பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதை எதிர்த்து அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications