டீசல் விலை நிர்ணயிக்கும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் விட அரசு பரிசீலனை!

அதேபோல, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறையை குறைப்பது பற்றி சிபாரிசு செய்வதற்காக, விஜய் கேல்கர் கமிட்டியை மத்திய நிதி அமைச்சகம் அமைத்தது.
இந்த கமிட்டி, கடந்த செப்டம்பர் மாதம் தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.அதில், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், மண்எண்ணெய் விலையை 2 ரூபாயும், சமையல் எரிவாயு விலையை 50 ரூபாயும் உடனடியாக உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது.
2014-2015-ம் நிதி ஆண்டு தொடங்குவதற்குள், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை நீக்கி, அதன் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது.
மேலும், சமையல் எரிவாயு, மண்எண்ணெய் ஆகியவற்றுக்கான மானிய சுமையை தாங்கக்கூடிய அளவுக்கு வைத்திருக்கும் வகையில், அப்பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்த வேண்டும் என்றும் சிபாரிசு செய்தது.
பரிசீலனையில்...
இந்த சிபாரிசுகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தற்போது பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி கூறுகையில், "டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்பது விஜய் கேல்கர் கமிட்டியின் யோசனை. அந்த யோசனையை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுபோல், வீடுகளுக்கான மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6 -ல் இருந்து 9 ஆக உயர்த்துவது பற்றியும் பரிசீலித்து வருகிறோம்," என்றார்.
பட்ஜெட்டுக்குள் இந்த கேல்கர் கமிட்டி பரிந்துரைகளை மத்திய அரசு அமலுக்குக் கொண்டுவரும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் டீசல், மண்ணெண்ணெய், சமையலஸ் எரிவாயு விலைகள் கடுமையாக உயர வாய்ப்புள்ளது என பெட்ரோலியத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போதைய நிலையில், டீசல் விலை ரூ 10.16, மண்ணெண்ணெய் ரூ 32, சமையல் எரிவாயு ரூ 490 நடஷ்டத்தில் விற்பனை செய்வதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications