தெலுங்கானா தனி மாநிலம்-ராகுல் முடிவுக்குக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா
ஹைதராபாத்: தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக இடியாப்பச் சிக்கலில் சிக்கியிருக்கும் காங்கிரஸ் கட்சி அதன் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.
தனித் தெலுங்கானா மாநிலம் கோரி உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனி மாநிலம் அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் ஆண்டுகள் உருண்டோடியும் தெலுங்கானா தனி மாநிலம் அமையவில்லை. அந்த மாநிலம் விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. அதற்குள் தெலுங்கானா பகுதி காங்கிரஸாரும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.
தெலுங்கானா தனிமாநிலம் அமைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி அழிந்தே போய்விடும் என்று எச்சரித்து கட்சி மேலிடத்துடன் மோதி வருகின்றனர். இவர்களின் அழுத்தங்களுக்காகவே காங்கிரஸ் கட்சி தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் ரொம்பவும் தீவிரமாகவே யோசித்து வருகிறது.
தனித் தெலுங்கானா என்ற மாநிலத்துக்கு மாற்றாக சிறப்பு நிதி உதவி திட்டத்தையோ அல்லது சிறப்பு அந்தஸ்தையோ அளித்து சமாளிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினர் எதையும் ஏற்கத் தயாராக இல்லை. இதனால் தற்போது இறுதி முடிவு எடுத்தாக வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாக கருதப்படுகிற ராகுல்காந்தி இதில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதற்காகவே சோனியா காந்தி காத்திருக்கிறாராம். ராகுல் காந்தியும் இதற்கேற்ப மிகவும் தீவிரமாக ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
அனேகமாக ராகுல் காந்தி தமது முடிவை சோனியாவிடம் தெரிவித்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்க்கள் தெரிவிக்கின்றன.
அநேகமா தேர்தலுக்குள் தனித் தெலுங்கானாவை கொள்கை அளவில் அறிவிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications