சென்னையில் அழகிரி- சந்திக்க மறுத்து கண்ணாமூச்சி காட்டிய கருணாநிதி!

Subscribe to Oneindia Tamil

 Karunanidhi and M.K. Azhagiri
சென்னை: திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை கோடிட்டுக் காட்டிய பேச்சால் கடும் அதிருப்தியில் இருக்கும் மு.க.அழகிரியை சந்திக்காமல் திமுக தலைவர் கருணாநிதி தவிர்த்துவிட்டார்.

தமக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்ற கருணாநிதியின் பேச்சுக்குப் பிறகு மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த மு.க.அழகிரி "திமுக ஒன்றும் மடம் அல்ல' என்று கூறினார்.

பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கிய அழகிரி கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு காலை 10 மணிக்குச் செல்லத் திட்டமிட்டார். இந்தத் தகவல் கிடைத்ததும் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்குச் சென்றுவிட்டாராம். பிறகு அங்கிருந்து புறப்பட்டு அறிவாலயத்துக்குச் சென்று சிஐடி நகர் வீட்டுக்குச் சென்று விட்டாராம். அதற்குப் பிறகு மாலையில் கோபாலபுரம் வீட்டுக்கு அழகிரி நேரடியாகச் சென்றுள்ளார். ஆனால், கருணாநிதி, அதற்கு முன்னே புறப்பட்டு அண்ணாநகரில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அன்பழகனோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு சிஐடி நகர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

கோபாலபுரம் வீட்டில் தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, மு.க.அழகிரி மட்டும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அழகிரி தன் ஆதங்கத்தை தயாளு அம்மாளிடம் தெரிவித்துவிட்டுச் சென்றாராம். மேலும் கருணாநிதி தம்மை சந்திக்காதது பற்றியும் குமுறியிருக்கிறார் அழகிரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+