தற்கொலை பாயிண்ட்டாக உருவெடுக்கும் சென்னை கோட்டூர்புரம் பாலம்!
சென்னை: சென்ன்னை கோட்டூர்புரம் அடையாறு பாலம்தான் இப்போது சென்னைவாசிகளின் தற்கொலை பாயிண்ட்டாக உருவாகியிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி பிரபல பாடகி நித்தியஸ்ரீயின் கணவர் மகாதேவன் கோட்டூர்புரம் அடையாறு ஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து சென்னைவாசிகள் தற்கொலை செய்ய இதே கோட்டூர்புரம் பாலத்தையே தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் கடந்த வியாழக்கிழமையன்று சாப்ட்வேர் என்ஜினியர் ரமேஷ் என்பவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு 2009-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் படகு மூலம் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் வேளச்சேரியைச் சேர்ந்த வினோதகுமார் என்பவர் நள்ளிரவில் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். அவரது அந்த வழியாக சென்றோர் காப்பாற்றியுள்ளனர்.
மேலும் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கோதண்டராம் என்பவர் அண்மைக்கால பலாத்கார சம்பவங்களால் மனமுடைந்த தாம் தற்கொலை செய்யப் போவதாக கூறி நேற்று கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து குதிக்க முயற்சித்திருக்கிறார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் குடிபோதையில் அப்படி செய்தது தெரியவந்துள்ளது.
இப்படி சென்னைவாசிகளின் தற்கொலை பாயிண்ட்டாக சென்னை கோட்டூர்புரம் பாலம் உருவெடுத்திருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்திருக்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications