சென்னையில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததாக பிளஸ் 2 மாணவன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த புகாரில் பிளஸ் 2 மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

சென்னை அயானவரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 9-ம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். அவரது பக்கத்து வீட்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் வசித்து வருகிறான். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் சிறுமியின் தந்தை அயானவரம் போலீசில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் காதல் ஜோடி சிக்கியது. மேஜர் ஆகாத பெண்ணை அழைத்துச் சென்றதால் கடத்தல், பலாத்காரம் செய்தல் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸ் மாணவனை கைது செய்தது.

பின்னர் சிறுமியை நீதிமன்றத்தில்.ஆஜர்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+