ராதாபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தீ வைப்பு: இலவச வேட்டி, சேலைகள் எரிந்து சாம்பல்
நெல்லை: ராதாபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் பொங்கலுக்கு ஏழைகளுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 350 வேட்டி, சேலைகள் எரிந்து நாசமாகின.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ளது தனக்கர்குளம் பஞ்சாயத்து. அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் தீ வைத்துவி்டடனர். பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து புகை வெளியே வந்தது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை கட்டுப்படுத்த முடியாத பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவி விஜயலட்சுமிக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 350 வேட்டி, சேலைகள், முக்கிய ஆவணங்கள், நாற்காலிகள், டேபிள், பீரோ உட்பட தளவாட சாமான்களும் தீயில் எரிந்து சாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாயத்து தலைவி விஜயலட்சுமி ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சின்னச்சாமி வழக்குப் பதிவு செய்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றார். இச்சம்பவம் ராதாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications