கால் நூற்றாண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
தென்காசி: கால் நூற்றாண்டு காலம் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு தென்காசி பத்திரிக்கையாளர் சங்கம் பாராட்டு விழா நடத்தி கெளரவப்படுத்தியது.
தென்காசி, செங்கோட்டை வட்டாரத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தென்காசியில் செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் சார்பில் 25ஆண்டுகள் பத்திரிக்கை துறையில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மூத்த பத்திரிக்கையாளர்கள் சண்முகம், கனியத்தா, முரளி ஆகிய மூன்று பேருக்கும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் பாராட்டும்,பரிசும் வழங்கப்பட்டது.

விழாவில் பத்திரிக்கையாளர்கள் கணேசன், முத்துசாமி, மைதீன், இசக்கிராஜன், ஆதி, பிரகாஷ், ஜீவா, கண்ணன், முத்தையா, குமரன், ஆறுமுக நைனார், மாரிமுத்து, முருகன், முப்புடாதி, கண்ணன் உள்பட எராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications