குரானை மனப்பாடம் செய்யாததால் 7 வயது மகனை அடித்துக் கொன்ற இந்திய அம்மாவுக்கு 17 ஆண்டு சிறை!

இந்திய வம்சாவழியை சேர்ந்த யூசுப் எகே என்பவர், லண்டன் நகரில் டாக்சி டிரைவராக வேலை செய்து வருகின்றார். இவர், தன் மனைவி, குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகின்றார். கடந்த 2010-ம் ஆண்டு, ஜுலை மாதம் இவரது மனைவி சாரா (33), தனது 7 வயது மகன் குர்ஆனை விரைவாக மனப்பாடம் செய்யவில்லை என்பதற்காக பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார். இந்த கொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக, இறைச்சியை தீய்க்க பயன்படுத்தும் திரவத்தை அந்த சிறுவன் சடலத்தின் மீது ஊற்றி எரித்து, தடயத்தை அழிக்க முயற்சி செய்தார். பிரேத பரிசோதனையின் போது, தீயில் கருகியதற்கு முன்னரே அந்த சிறுவன் உயிரிழந்திருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, சாராவிடம் போலீசார் விசாரித்தபோது, இந்த தவறை தான் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
லண்டன் நகரில் உள்ள கேர்டிப் கிரவுன் நீதிமன்றத்தில், சாரா மீது போலீசார் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சாராவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி வெய்ன் வில்லியம்ஸ், '17 ஆண்டு சிறைதண்டனையை நிறைவுசெய்த பின்னரே குற்றவாளியை பரோலில் விடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications