இலவச வேட்டி சேலை, பொங்கல் பரிசு… கொடநாட்டில் ஜெ. தொடங்கி வைத்தார்
கொடநாடு: ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி சேலை, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாட்டில் தொடங்கிவைத்தார்.
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி பெறும் சுமார் ரூ.1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாய் மதிப்புடைய ஒரு கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்புடைய ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என ரூ.160 மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கான தொடக்க விழா நீலகிரி மாவட்டம்,கோடநாட்டில் உள்ள கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலையின் கோடநாடு நியாய விலைக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதியம் 2.30 மணிக்கு அங்கு வந்த முதல்வர் ஜெயலலிதா பயனாளிகளுக்கு இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளையும் வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications