மதுரை மாவட்டத்துக்குள் நுழைய தடை: நோட்டீஸ் வாங்க மறுப்பு … ராமதாஸ் வீட்டு கதவில் ஒட்டப்பட்டது
மதுரை: மதுரை மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் அனுப்பிய நோட்டீஸை பெற பாமக நிறுவனர் ராமதாஸின் குடும்பத்தினர் மறுத்ததை தொடர்ந்து,வீட்டுக் கதவில் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
மதுரையில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற சமுதாய அமைப்பு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்த கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து பொது அமைதி கருதி பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வரை டாக்டர் ராமதாஸ் மதுரை மாவட்டத்துக்குள் நுழைய மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஷ்ரா தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் நகல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத்துக்கு இ-மெயில் மற்றும் பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த நோட்டீசை டாக்டர் ராமதாசிடம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் வானூர் தாசில்தார் குமாரபாலன், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், உள்ளிட்டோர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றனர்.
அப்போது டாக்டர் ராமதாஸ் வீட்டில் இல்லை. அவர் பொங்கல் விழாவுக்காக மலேஷியா சென்றுள்ளதாக கூறி, நோட்டீசை வாங்க அவர் வீட்டில் இருந்த அனைவரும் மறுத்தனர். இதனையடுத்து அவரது வீட்டு கதவின் வெளிப்புறத்தில் மதுரை மாவட்டத்துக்குள் ராமதாஸ் நுழைவதற்கான தடை உத்தரவு நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். பின்னர் அதனை போட்டோ எடுத்துக்கொண்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். ஆனால் கதவில் ஒட்டப்பட்ட நோட்டீஸை உடனே வீட்டில் இருந்தவர்கள் கிழித்தெறிந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications