இலவச காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வருமான உச்சவரம்பு நீக்கம்
சென்னை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லாமல் பயன்பெற சலுகை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் என மாற்றியமைத்து கூடுதலாக பல சலுகைகளை இந்த அரசு வழங்கி வருகிறது.
திட்டத்தை மாற்றி அமைக்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனை மாற்றி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும். வருமான உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை வைத்தது.
அதனை ஏற்று தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தில் மாற்றுத் திறனாளியாக ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாக சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications