குவைத் புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

குவைத் ஏர்வேஸ் KU-344 விமானம், இன்று 216 பயணிகளுடன் சென்னையிலிருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டது. ஆனால், பறந்து கொண்டிருக்கும் போது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திருப்பினார்.
அடுத்த 45 நிமிடத்தில் அந்த விமானம் சென்னையில் அவரசமாக தரையிறக்கப்பட்டது.
விமான நிலைய தொழிலாளர்கள் போராட்டம்-சரக்கு போக்குவரத்து பாதிப்பு:
சென்னை விமான நிலையத்தில் சரக்குப் பிரிவில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் நேற்றிரவு பணிக்கு வந்த 120 பேர் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி பணிகளை செய்யாமல் அதிகாரிகளின் அலுவலக வாயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் விமானத்தில் சரக்கு ஏற்றும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இன்று காலை வரை அவர்களது போராட்டம் விடிய, விடிய நீடித்தது. இதற்கிடையே காலை பணிக்கு வந்த மற்ற தொழிலாளர்களும் கார்கோ விமான நிலைய வாசலில் நின்று போராட்டம் நடத்தினர்.
தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் சரக்கு விமான போக்குவரத்து முழுவதுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் சாமாதான பேச்சு நடத்தி வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications