பாகிஸ்தான் கொடுத்த புகார் தொடர்பாக ஐ.நா. குழு விசாரணை
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ராணுவ கண்காணிப்புக் குழு விசாரணை நடத்த உள்ளது.
இந்தியா, பாகிஸ்தானுக்கான ஐ.நா.சபையின் ராணுவ கண்காணிப்புக் குழுவுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில் ஜனவரி 6ம் தேதியன்று இந்திய ராணுவத்தால் தமது ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்து விசாரிக்கப்பட இருக்கிறது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீ மூனின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெஷிர்கி கூறியுள்ளார்.
இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகக் கோரமாக ஜனவரி 8ம் தேதியன்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் தரப்பில் எந்த புகாரும் தங்களுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இரு நாடுகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் மார்ட்டின் வலியுறுத்தியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications