இரும்புக் கம்பியால் மனைவி தொடையில் சூடு வைத்த கணவர் கைது.. மாமியார் ஓட்டம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கட்டிய மனைவி என்றும் பாராமல், தொடையில் இரும்புக் கம்பியால் சூடு வைத்த கொடூரக் கணவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொடும் செயலுக்கு உடந்தையாக இருந்த மாமியார் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி, நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன். 29 வயதான இவர் தொழிலாளி. இவருக்கும் செல்வி என்ற 27 வயதுப் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் கண்ணனும் அவரது தாயார் ஜெயலட்சுமியும் சேர்ந்து செல்வியை வரதட்சணை கூடுதலாக கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கண்ணன் இரும்புக் கம்பியை பழுக்க காய்ச்சி, அதை தனது மனைவியின் தொடையில் வைத்து சூடு போட்டு மிருகம் போல நடந்து கொண்டார். இதைத் தட்டிக் கேட்காமல் பார்த்து ரசித்துள்ளார் மாமியார்.
படுகாயமடைந்த செல்வியை உடனடியாக அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் கண்ணனைக் கைது செய்தனர். மாமியார் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications