திரவ வெடிகுண்டு- பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள்: வலுவாகும் மாவோயிஸ்டுகள்?
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரிசர்வ் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான அண்மைய மோதல் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேகர் மாவட்டத்தின் கடிலா அருகே அமுஅதிகார் என்ற கிராமத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ரிசர்வ் படையினர் மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட ரிசர்வ் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆண்டின் முதலாவது மிகப் பெரிய நடவடிக்கையாக இது கருதப்பட்டது. அப்போது 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 ரிசர்வ் படையினர் உயிரிழந்துள்ளனர். மாவோயிஸ்டுகள் தரப்பில் 8 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் மூவரது உடலின் வயிற்றுப் பகுதியில் தையல் போடப்பட்டிருப்பது தெரியவந்தது. மூவரது உடல்களும் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்ட போது வயிற்றுக்குள் ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தையல்கள் பிரிக்கப்பட்டு சோதித்துப் பார்க்கப்பட்டதில் ஒரு வீரரின் உடலில் 'திரவ' நிலை வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. மற்ற இருவரது உடலில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் திரவ வகை வெடிகுண்டு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க வெடிக்கும் தன்மை வாய்ந்தது. இந்த திரவ வகை டெட்டனேட்டர் வெடிக்கும் போது மற்ற வெடிகுண்டுகளின் இழப்பை விட மிகப் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டாக மாவோயிஸ்டுகளின் ஒடிஷா முகாம்களில் இருந்து இப்படியான திரவ வகை வெடிகுண்டுகள் பேரல் பேரலாக கைப்பற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜார்க்கண்ட்டில் அவற்றை பயன்படுத்தவும் மாவோயிஸ்டுகள் முனைந்திருப்பது அதிர வைக்கக் கூடியதாக இருக்கிறது.
இத்துடன் முதல் முறையாக பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள், ஆயுதங்களும் மாவோயிஸ்டு முகாம்களிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது. முன்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளிடம் கைப்பற்றப்பட்டிருந்தது. இவை வடகிழக்கு மாநில தீவிரவாத இயக்கங்கள் மூலமாக மாவோயிஸ்டுகளுக்கு கிடைத்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.
தற்போது பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் மாவோயிஸ்டுகளிடம் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு நிலை மோசமடைந்து வரும் நிலையில் மாவோயிஸ்டுகளுக்கான பாகிஸ்தானின் ஆயுத சப்ளை விவகாரமும் பூதாகரமாக வெடிக்கும் என்று தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications