ஜார்க்கண்டில் பயங்கரம்: சிபிஆர்எப் வீரரின் வயிற்றில் வெடிகுண்டு வைத்த மாவோயிஸ்டுகள்
லடேகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த காவலரின் உடலில் ரசாயன வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை ஜார்க்கண்டின் லடேகர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மொத்தம் 12 காவலர்கள் உயிரிழந்தனர். அதில் 5 பேரின் உடலை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் பிறகு கிடைத்த உடலை நேற்றிரவு பிரேதப் பரிசோதனை செய்ய எடுத்துச் சென்றனர். அப்போது வயிற்றுப் பகுதி வெட்டி தைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சந்தேகப்பட்டு அவற்றை ஸ்கேன் செய்து பார்த்ததபோது, அதன் வயிற்றுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான பொருள் இருந்ததை கண்டுபிடித்த மருத்துவர்கள், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்தப் பொருள் ஒரு திரவநிலை வெடிகுண்டு என்பதை உறுதி செய்தனர். பின்னர் அந்த வெடிகுண்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.
இதுபோன்ற வெடிகுண்டு, இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. உயிர்ப்பலியை அதிகரிப்பதற்காக, இறந்துபோன வீரர்களின் உடலில் வெடிகுண்டுகளை வைத்து அனுப்புவது மாவோயிஸ்டுகளின் மிகப் பழமையான உத்தியாகும். நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் இருந்த இந்த கொடிய முறையை அவர்கள், தற்போது மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications