ஆண்டாள் கோவிலுக்கு 105 கிராம் தங்கம் தந்த விஜயகாந்த்.. டென்ஷனாகி ஓடி வந்த 2 அமைச்சர்கள்!

இன்று காலையிலிருந்தே ஆண்டாள் கோவில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. விஜயகாந்த் வரப் போவதாக தகவல் வெளியாகியிருந்ததால் கோவிலுக்கு வெளியே கட்சியனர் திரண்டு நின்றனர். அதிகாலை சரியாக மூன்றே முக்கால் மணியளவில் விஜயகாந்த் மனைவியுடன் வந்தார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்ட விஜயகாந்த், கோவில் விமானம் அமைக்கும் பணிக்காக 105 கிராம் தங்கத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பும் கூட முதலில் இங்கு வந்துதான் சாமி கும்பிட்டு விட்டு்ச சென்றார் விஜயகாந்த். அத்தேர்தலி்ல தேமுதிகவுக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்தது, விஜயகாந்த்தும் எதிர்க்கட்சித் தலைவரானார். அதேபோல தற்போது புதிய கூட்டணிக்காக தேமுதிகவும், விஜயகாந்த்தும் தயாராகி வரும் நிலையில், ஆண்டாளை நாடி விஜயகாந்த் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓடி வந்த அமைச்சர்கள்
இந்த நிலையில்,விஜயகாந்த் வந்து 105 கிராம் தங்கத்தை அன்பளிப்பாக கொடுத்த தகவல் ராஜபாளையத்தில் தங்கியிருந்த அமைச்சர்கள் சிவபதி மற்றும் ராஜேந்திர பாலாஜிக்குப் போனது. கட்சியினர் சென்று அவர்களைச் சந்தித்து, விஜயகாந்த் நமக்கு முன்பாக முந்திக் கொண்டு தங்கத்தை அன்பளிப்பாக வழங்கி விட்டார். இதனால் நாம் அம்மாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து இரு அமைச்சர்களும் வேகம் வேகமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கிளம்பி வந்தனர். பின்னர் கோவிலுக்கும் சென்றனர்.
இப்படி அடுத்தடுத்து விஜயகாந்த்தும், அமைச்சர்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்ததால் காலையிலிருந்தே கோவில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications