மதுரையில் 500 பவுன் நகையுடன் அடகுக்கடை உரிமையாளர் ஓட்டம்!
மதுரை: மதுரையில் 500 பவுன் நகைகளுடன் அடகுக்கடை உரிமையாளர் தலைமறைவான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, உச்சபரம்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். அவர், 'முத்து பைனான்ஸ்' என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக விளம்பரம் செய்தார். இதை நம்பி அவரிடம் சுமார் 400 பேர் 500 பவுன் தங்க நகைகளை அடகு வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் சிலர் தாங்கள் அடகு வைத்த நகையை திருப்ப வந்துள்ளனர். அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்ட லட்சுமணன் நகையை சில நாட்களில் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் கடைக்கு பெரிய பூட்டு போட்டுவிட்டு நகைகளுடன் லட்சுமணன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து அறிந்து நகைகளை அடுகு வைத்தவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊமச்சிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications