இலவச வேட்டி, சேலை வழங்குவதில் தகராறு: அதிமுக நிர்வாகியை வெட்டிய திமுகவினர்
ராமநாதபுரம்: இலவச வேட்டி, சேலை வழங்கியபோது ஏற்பட்ட தகராறில் அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலையத்திற்குட்பட்டது எ. புனல்வாசல். அங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. அந்த வேட்டி, சேலைகள் தரமானதாக இல்லை என்றும் அதை மாற்றிவிட்டு தரமானவற்றை வழங்க வேண்டும் என்றும் திமுகவைச் சேர்ந்த சின்னமுருகன் தெரிவித்தார். இதை அதே ஊரைச் சேர்ந்த கடலாடி அதிமுக கவுன்சிலர் லட்சுமியின் மாமனாரும், அதிமுக நிர்வாகி சரவணனின் தந்தையுமான போஸ் கண்டித்தார்.
இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திமுகவைச் சேர்ந்த சகோதரர்களான ராஜேந்திரன்(32), தியாகராஜன்(27) மற்றும் திருமுருகன், திருப்பாண்டி, சின்னமுருகன் ஆகியோர் சேர்ந்து போஸை அடித்ததுடன் அரிவாளால் வெட்டினர். இது குறித்து போஸ் கடலாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜேந்திரன் மற்றும் தியாகராஜனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications