குமரி-வாஸ்கோடகாமா (கோவா) வழி தடத்தில் தினசரி ரயில் இயக்க கோரிக்கை

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கட்டுமான தொழிலுக்காகவும், மீன்பிடி தொழிலுக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கொங்கன் கடற்கரை மார்க்கம் உள்ள பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து சொர்னூர், கோழிக்கோடு, மாகி, தலச்சேரி, கண்ணணூர், காசரகோடு, மங்களூர், உடுப்பி, கார்வார் மற்றும் கோவா போன்ற பகுதிகளுக்கு நேரடியாக செல்ல தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை.
கொங்கன் கடற்கரை மார்க்கம் உள்ள சுற்றுலா மற்றும் ஆன்மீக தளங்களான கூர்க், தாகூசாகர் அருவி, ஜோக் அருவி, கொல்லூர் மூகாம்பிகா கோவில், உடுப்பி கோவில், மங்களாதேவி கோவில், கோகர்ணா, கும்பசரி, தர்மஸ்தலா போன்ற இடங்களுக்கு செல்ல தினசரி ரயில் வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதே போன்று உலக புகழ்பெற்ற அழகிய கடற்கரைகளைக் கொண்ட கோவாவையும் தென்கோடி முனையான கன்னியாகுமரியையும் இணைப்பதற்கு நேரடி தினசரி ரயில் வசதி இல்லை. கிறிஸ்தவர்களின் முக்கிய புனித இடங்களில் கோவாவும் ஒன்று. இங்கு புனிதர் பிரான்சிஸ் சேவியரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலிருந்து அதிகப்படியான கிறிஸ்தவர்கள் கோவாவிற்கு சென்று வருகின்றனர். இவர்கள் தினசரி ரயில் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இதுவரை எந்த ஒரு தினசரி ரயிலும் கொங்கன் வழி தடத்தில் இல்லை. தற்போது இயக்கப்படும் ரயில்களான நாகர்கோவில்-காந்திதாம் வாராந்திர ரயில், திருநெல்வேலி-ஹாப்பா வாரம் இருநாள் ரயில்கள் குஜராத் மாநிலம் வரை செல்லும் நெடுந்தூர ரயிலாக இருப்பதால் குறைந்த தூரம் வரை செல்லும் பயணிகளுக்கு போதிய முன்பதிவு இருக்கைகள் கிடைக்காத நிலை உள்ளது.
மங்களூர்-நாகர்கோவில் இடையே ஓடிக் கொண்டிருக்கும் எர்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மங்களுர் போய் சேருகிறது. மறுமார்க்கத்தில் மங்களூரிலிருந்து காலை 7.10 மணிக்கு புறபட்டு இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேருகிறது. நடு இரவில் நாகர்கோவிலுக்கு ரயில் வந்தால் அதில் வருகின்ற பயணிகள் பாதுகாப்பாக தங்களின் வசிப்பிடங்களுக்கு செல்வதற்கு அச்சமாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் கேட்டது மங்களூருக்கு இரவு நேர ரயில் சேவை, கிடைத்ததோ கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படாத வகையில் பகலும் இல்லாத இரவும் இல்லாத இரண்டும் கெட்டான் ரயில் சேவை. நள்ளிரவு நேரங்களில் இயங்குவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு இந்த ரயிலால் எந்த பயனும் இல்லை.
நாகர்கோவில்-மங்களூர் எர்நாடு ரயிலின் நேரத்தை மாற்றி அனைத்து விதமான சுற்றுலா பயணிகளின் வசதியின் பொருட்டு ஒரு மார்க்கத்தை வாஸ்கோடகாமா (கோவா) வரை நீட்டிப்பு செய்து மறுமார்க்கத்தை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரி-வாஸ்கோடகாமா (கோவா) எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க வேண்டும் என்பது ஆகும்.
குமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் இரணியல், குழித்துறை, பாறசாலை ரயில் நிலையங்களில் நிரந்தரமாக நின்று செல்லபட வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். எனவே, இந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்று சம்பந்தப்பட்ட ரயில்களை இயக்க வேண்டும் என்றார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications