பிரதமரை கைது செய்ய முடியாது: பாக். சுப்ரீம் கோர்ட்- அரசு இடையே மோதல் வெடித்தது!
இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் உச்சநீதிமன்ற உத்த்ரவுப்படி பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய முடியாது என்று அரசின் ஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் அஷ்ரப் மற்றும் 15 பேரை ஊழல் வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 24 மணிநேரத்தில் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, வானமே இடிந்து விழுந்தாலும் ஊழல் வழக்கின் விசாரணை தொடரும் என்றும் காட்டமாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் காலக்கெடு முடிந்தும் பிரதமர் கைது செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று காலை பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று நடைபெற்றது. அப்போது பிரதமர் உள்ளிட்டோரை ஏன் கைது செய்யவில்லை என்று அரசுத் தரப்பை நோக்கி தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பாகிஸ்தான் அரசின் ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைவர் போகாரி, பிரதமரை கைது செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் கைது செய்யவில்லை என்றார்.
இதைக் கண்டித்த தலைமை நீதிபதி, இந்த நாட்டில் சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று காட்டம் காடினார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விசாரணை அமைப்புக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பாகிஸ்தான் அரசுக்கும் அந்நாட்டு உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications