மூட்டை பூச்சி, எலிகள் தொல்லை: சேலத்தில் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் இறங்கிய பயணிகள்

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி வழியாக குஜராத் மாநிலம் ஓகா நகருக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்றிரவு கிளம்பி இன்று காலை 6-45 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்தது.
ரயில் வந்து நின்றதும் ஏ.சி. உள்ளிட்ட பிற பெட்டிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் கீழே இறங்கினர்.
ரயிலில் எலி, மூட்டைப் பூச்சிகள் தொல்லை சமாளிக்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும், எனவே வேறு கோச்களை தர வேண்டும் என்றும், அதுவரை ரயிலை இயக்க கூடாது என்றும் கோரி ரயில் நிலையத்தில் திடீர் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து ஸ்டேசன் மாஸ்டர் மற்றும் அதிகாரிகள் வந்து பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பயணிகள் ரயில் புறப்பட்டதில் இருந்தே எலி, மூட்டைப் பூச்சி தொல்லை மிக அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் புகார் செய்து வருகிறோம். அவர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் புகார் செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கேட்டனர்.
ஆனால், அதிகாரிகள் சேலத்தில் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் புறப்பட்டு செல்லுங்கள். திருப்பதியில் புதிய கோச் ஒதுக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர்.
இதையடுத்து 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
திருப்பதியில் என்ன நடந்துச்சோ?!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications