2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்: சோனியா நம்பிக்கை!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் பேசிய சோனியா, நாட்டில் மற்ற கட்சிகளைவிட வலுவான தெளிவான சித்தாந்தம் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தேர்தலின் போது முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுப்போம். ஊழலை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளாது. ஊழல்வாதிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம். இதற்காகவே லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டது. ஊழலைக் கட்டுப்படுத்தும் வகையில்தான் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கும். பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கடுமையான பொருளாதார நெருக்கடியால்தான் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது.வரும் தேர்தலை காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி சமமாக நடத்தும். பாகிஸ்தான் மட்டுமின்றி அனைத்து நாடுகளுடனும் மத்திய அரசு நட்புறவுடன் நடந்து கொள்ளவே விரும்புகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கையைப் பொறுத்தே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி மத்திய அரசு முடிவு செய்யும் என்றார் சோனியா.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications