இளைஞர்களின் மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்: மன்மோகன்சிங்

ஜெய்ப்பூர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் மன்மோகன்சிங் பேசியதாவது:
ஜெய்ப்பூரில் கூடிய இந்த மாநாட்டின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய வழிகாட்டுதல்கள் கிடைத்துள்ளன. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரது தலைமையின் கீழ் சிறப்பாக நாம் செயல்படுவோம். இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
2004, 2009 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முந்தைய பாஜக ஆட்சிக்காலத்தைவிட குறிப்பிடத்தகுந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியிருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 5.5சதவீதம்தான் பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலங்களில் இது 8சதவீதமாக உயர்ந்திருக்கிறது,
முந்தைய பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட வறுமையை பலமடங்கு ஒழித்திருக்கிறோம். அவர்களது ஆட்சிக் காலத்தில் 3 சதவீதமாக இருந்தது வேளாண் வளர்ச்சி. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 3.7 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்.
கிராமப்புறங்களில் வேளாண் துறைக்கும் சுகாதார நலனுக்கும் முக்கியத்தும் கொடுத்திருக்கிறோம். நாம் எடுத்த நடவடிக்கைகளுக்கான பயன்கள் வரும் ஆண்டுகளில் தெரியவரும்.
நாட்டின் போலியோவே இல்லாது ஒழித்திருப்பது மிகப்பெரும் சாதனையாகும். கிராமப்புறங்களில் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பெண்களைப் பற்றிய சமூகத்தின் சிந்தனைப் போக்கில் மாற்றம் அவசியமானதாகும்.
விலைவாசி உயர்வு என்பது சவாலான விஷயம்தான். கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால்தான் விலைவாசி உயருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் கொடூர செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. பாகிஸ்தானின் அத்துமீறல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். நாம் இருதரப்பு நல்லுறவையே விரும்புகிறோம் என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications