காங்கிரஸ் கட்சியின் 2வது துணைத் தலைவர் ராகுல் காந்தி!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் 2வது துணைத் தலைவர் என்ற பெருமையை ராகுல் காந்தி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 1998ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். அவருக்கு முன்பு போல உடல் நலம் இல்லை. நோய் காரணமாக முன்புபோல அவரால் விறுவிறுப்புடன் செயல்பட முடியவில்லை.
இந்த நிலையில் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் முதலில் அவரை அமர்த்தியுள்ளனர்.

அரிய பதவி
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலைவர், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் என்றுதான் உள்ளது. துணைத் தலைவர் பதவி என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது.

முதல் துணைத் தலைவர் அர்ஜூன் சிங்
காங்கிரஸ் கட்சி உருவான காலம் முதல் துணைத் தலைவராக யாரும் நியமிக்கப்பட்டதில்லை. இந்த நிலையில் ராஜீவ் காந்தி தலைவராக இருந்தபோது அதிருப்தியில் இருந்து வந்தவரான அர்ஜூன் சிங்கை சமாதானப்படுத்த அவரை துணைத் தலைவராக்கினார்.

2வது தலைவர் ராகுல் காந்தி
அதன் பிறகு துணைத் தலைவர் பதவியை யாரும் வகித்ததில்லை. தற்போது ராகுல் காந்திக்கு அப்பதவி தரப்பட்டுள்ளது.

அத்தனை பேரும் பின்னுக்கு...
ராகுல் காந்திக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதன் மூலம் மன்மோகன் சிங் உள்ளிட்ட அத்தனை பேரும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications