ராகுலுக்காவது முழு சுதந்திரம் கொடுங்கப்பா.. ஈவிகேஎஸ் வேண்டுகோள்!

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை கோஷ்டி பூசல் நிறைந்த தமிழக காங்கிரஸ் ஒருமனதாக வரவேற்றுள்ளது. அவர் கட்சியில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவார் என்று அது எதிர்பார்க்கிறது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் ஜெய்பூரில் இருந்து தொலைபேசியில் கூறுகையில், சோனியா காந்தி மற்றும் ராகுல்ஜி தற்போது ஒன்றாக உட்கார்ந்து லோக்சபா தேர்தல் குறித்து வியூகம் வகுப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு ராகுல் புதிய அணியை உருவாக்குவார் என்று நம்புகிறேன். பெரும் மாற்றத்தை ஏற்படுத்த அவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்றார்.
மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ராகுல் ஏற்கனவே இளைஞர் காங்கிரஸில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அதே போன்று அவர் காங்கிரஸிலும் மாற்றத்தை ஏற்படுத்துவார். காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காது. ஆனால் யாரை வேட்பாளர் ஆக்குவது என்பதை முடிவு செய்வதில் காங்கிரஸுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.வும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான விடியல் சேகர் கூறுகையில், கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ராகுல் காந்தி மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications