இன்று இரவு முதல் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது

Subscribe to Oneindia Tamil

Train
சென்னை: மத்திய அரசு அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்க அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

பயணிகள் ரயில் கட்டணத்தை கடந்த வாரம் ரயில்வே துறை உயர்த்தியது. 20 சதவீதம் அளவிற்கு அனைத்து வகுப்பு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. கட்டணம் உயர்வதால் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் கூடுதல் கட்டணத்தை டிக்கெட் கவுண்டர்களில் செலுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி உயர்த்தப்படுகிற கட்டணத்திற்கும், ஏற்கனவே செலுத்திய கட்டண தொகைக்கும் உள்ள வித்தியாச கட்டணத்தை பயணிகள் கவுண்டர்களில் செலுத்தி புதிய டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும். கவுண்டரில் செலுத்தாதவர்கள் பயணத்தின்போது டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

பயணிகளிடம் கூடுதல் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க சென்னை ரயில்வே கோட்டம் 2 ரயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்களை திறக்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 டிக்கெட் கவுண்டர்களும், எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு கவுண்டரும் நாளை திறக்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே வணிக மேலாளர் கூறுகையில், கூடுதல் கட்டணத்தை வசூலிக்க சென்ட்ரல், எழும்பூரில் சிறப்பு கவுண்டர் திறக்கப்படுகிறது. இந்த கவுண்டர் நாளை முதல் ஒரு மாதத்திற்கு செயல்டும். முன்பதிவு செய்த பயணிகள் கூடுதல் கட்டணத்தை கவுண்டர்களில் செலுத்தி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+