For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாஸ்மாக் கடைக்கு 3 நாட்கள் லீவ்… குடிமகன்கள் ஸ்டாக் வைக்க முடிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Tasmac
சென்னை: மிலாடி நபி, குடியரசு தினம், வள்ளலார் பிறந்த தினங்களை ஒட்டி ஜனவரி 25, 26, 27 ஆகிய மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் வரலாற்றிலேயே 3 தினங்கள் தொடர்ந்து மூடப்படுவது இதுதான் முதன் முறையாகும்.

ஜனவரி 25 ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 26ல் இந்திய குடியரசுதினம், 27ம் தேதி தைபூசம் மற்றும் வள்ளலார் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது இதன் காரணமாகவே மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக தினமும் ரூ.80 கோடிக்கு மது வகைகள் விற்பனை ஆகிறது. 3 நாட்கள் தொடர்ந்து மதுக்கடைகள் மூடப்படுவதால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு சுமார் ரூ.250 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களை விட விற்பனை கூடுதலாக இருக்கும். வார முடிவு நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் வருவாய் இழப்பு அதிக அளவு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்டாக் வைக்கும் குடிமகன்கள்

இதனிடையே மூன்று நாட்களுக்கு சரக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் இன்றையில் இருந்தே தங்களுக்குத் தேவையாக சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைக்கத் தொடங்கியுள்ளனராம். இதனால் அந்த இழப்பை இதில் ஈடுகட்டி விடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
Tipplers, be prepared for a shock! You will not get your booze for three days starting Friday as the state-run Tasmac liquor outlets will remain closed for three consecutive days for the first time. On the other hand, Tasmac officials who raked in a moolah during Christmas, New Year as well as Pongal are a bit low, as the continuous closure of the shop will lead to a loss of Rs 250 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X